பொதுநலம் - பேணுவோம் சுயநலம் - சுட்டெரிப்போம்
இன்றைய சமுதாயத்தின் நிலையும் குணுமும் மாறிக்கொண்டும் மழுங்கிக்கொண்டும் வந்து கொண்டேயிருக்கிறது. சமூகத்தில் மூடு பழக்கங்கள் ஒரு புரம் தலைவிரித்தாடினாலும் மறுபுறம் மக்களின் குணங்களின் தரத்தில் குறைவும் தேய்வும் காணப்படுகிறது. உலகில் அதிகமான கொலை கொள்ளை , அடுத்தவரை நிம்மதியாக வாழ விடக்கூடாது என்ற எண்ணம் , மனிதனை மேலும் மேலும் வழிகேட்டில் தள்ளுகிறது. ஆனால் ஒன்றை தெளிவாக விளங்கவேண்டும்: சுயநலப்போக்குக் கொண்டு பொதுநலம் கொஞ்சமும் இல்லாத அல்லாஹ்வும் , இரசூலும் விரும்புவது இல்லை. பொதுநலம் இஸ்லாத்தின் ஒரு அங்கம். உண்மை முஸ்லிமின் அடையாளம். சுருக்கமாக வேறொரு வார்த்தையில் சொன்னால் அது ஈமானின் ஒரு பகுதி. பொதுநலம் இல்லாது அடுத்தவர் நலன் கருதாது வாழுபவர் இஸ்லாத்தின் பண்பாடு வட்டத்திலிருந்து அவர் வெளியேறிகொண்டிருக்கிறார். قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ - أَوْ بِضْعٌ وَسِتُّونَ - شُعْبَةً، فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنِ الطَّرِيقِ، وَالْحَيَاءُ...