.......................................................................
அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.......
எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கி கொண்டானோ,
நிச்சயமாக அவனுக்கு சுவர்க்கம் தான் தங்குமிடம்.
இறைநூல்-79:40,41
குர்ஆன் முன்னறிவிப்பு:
*إِذْ قَالَ يُوسُف لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْت أَحَد عَشَرَ كَوْكَبًا وَالشَّمْس وَالْقَمَر رَأَيْتهمْ لِي سَاجِدِينَ* سورة يوسف ٤
யூஸுப் நபி (அலை) அவர்கள் 11 நச்சத்திரங்களும், சூரியனும் சந்திரனும் அவருக்கு சுஜூத் செய்யக்கண்டார். அதை தன் தகப்பனார் நபி யஃகூப் (அலை) அவர்களிடம் சொன்னார்கள்.
அது நடந்தது!
*وَرَفَعَ أَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوا لَهُ سُجَّدًا ۖ وَقَالَ يَا أَبَتِ هَٰذَا تَأْوِيلُ رُؤْيَايَ مِنْ قَبْلُ قَدْ جَعَلَهَا رَبِّي حَقًّا*(سورة يوسف )١٠٠
பின்னர் எகிப்த் ஆட்சியாளரின் அமைச்சராகிய யூஸுப் நபிக்கு அக்கால முறைப்படி அவரது 11 சகோதரர்களும் தகப்பனும், தாயும் சிறம் தாழ்த்தினர. பின்னர் யூஸுப் நபி தன் தந்தையிடம் அவர் சிறு வயது பிராயத்தில் கனவில் கண்ட அந்த முன்னறிவிப்பை ஞாபகமூட்டி மகிழ்ந்தார்.
முன்னறிவுப்பு:
*وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيَانِ ۖ قَالَ أَحَدُهُمَا إِنِّي أَرَانِي أَعْصِرُ خَمْرًا ۖ وَقَالَ الْآخَرُ إِنِّي أَرَانِي أَحْمِلُ فَوْقَ رَأْسِي خُبْزًا تَأْكُلُ الطَّيْرُ مِنْهُ ۖ نَبِّئْنَا بِتَأْوِيلِهِ ۖ إِنَّا نَرَاكَ مِنَ الْمُحْسِنِينَ* (سورة يوسف ٣٦)
நபி யூஸுப் சிறையில் இருந்த 2 வாலிபர்கள் கனவில் கண்ட முன்னறிவிப்பு
அவர்களில் ஒருவர் நான் எனது தலையில் ரொட்டிகளை சுமந்து செல்ல அவைகளை பறவைகள் கொத்தி உண்ணுவது போல் கணவுகண்டேன்.
இதற்கு விளக்கம் சொல்லுமாறு நபி யூஸுவிடம் அவர்களில் ஒருவர் கேட்கிறார்.
அது நடந்தது:
*يَٰصَاٰحِبَىِ ٱلسِّجْنِ أَمَّآ أَحَدُكُمَا فَيَسْقِى رَبَّهُۥ خَمْرًا ۖ وَأَمَّا ٱلْءَاخَرُ فَيُصْلَبُ فَتَأْكُلُ ٱلطَّيْرُ مِن رَّأْسِهِۦ ۚ قُضِىَ ٱلْأَمْرُ ٱلَّذِى فِيهَِ تسْتَفْتِيَان*(سورة يوسف ٤١)
அவ்வாறான காட்சியை கண்டவர் அவரின் தண்டனையாக சிலுவையில் அறையப்படுவார். பின்னர் அவரின் தலையை பறவைகள் வந்து கொத்தும் என்றார்கள் யூசுப் நபி. அதேபோல சிறிது காலத்தில் நடந்தது.
குர்னஆ்ன் முன்னறிவிப்பு:
*وَقَالَ الْمَلِكُ إِنِّي أَريٰ سَبْعَ بَقَرَاتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعَ سُنبُلَاتٍ خُضْرٍ* *وَأُخَرَ يَابِسَاتٍ ۖ يَا أَيُّهَا الْمَلَأُ أَفْتُونِي فِي*
*رُؤْيَايَ إِن كُنتُمْ لِلرُّؤْيَا تَعْبُرُون* (سورة يوسف ٤٣)
எகிப்திய அரசன் கண்ட முன்னறிவிப்பு.
ஏழு மெழிந்த, காய்ந்த மாடுகள் ஏழு கொழுத்த மாடுகளை உண்பதையும், ஏழு பசுமையான கதிர்களையும், ஏழு காய்ந்த இளைத்துப் போன கதிர்களையும் கணவு கண்டான்.
அது நடந்தது:
*قَالَ تَزْرَعُونَ سَبْعَ سِنِينَ* دَأَبًا فَمَا حَصَدتُّمْ فَذَرُوهُ فِي سُنبُلِه ِإِلَّا قَلِيلًا مِّمَّا تَأْكُلُون
*ثُمَّ يَأْتِي مِن بَعْدِ ذَٰلِكَ سَبْعٌ شِدَادٌ يَأْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ إِلَّاقَلِيلًا مِّمَّا تُحْصِنُون* .
*ثُمَّ يَأْتِي مِن بَعْدِ ذَٰلِكَ عَامٌ*
*فِيهِ يُغَاثُ النَّاسُ وَفِيهِ يَعْصِرُونَ* (سورة يوسف ٤٦_٤٩)
தொடர்ச்சியாக வருகிற ஏழு வருடங்கள் செழிப்பாகவும்....அதைத்தொடர்ந்து வருகிற ஏழு வருடங்கள் மிக வரட்சியாகவும் இருக்கும்....எனவே இந்த செழிப்பான ஏழு வருடத்தின் விளைச்சலை சேமித்து அடுத்த பஞ்சமான ஏழு வருடத்தில் அதை மக்களுக்கு அளித்து நிலமையை சமாளிக்கலாம் என அந்த மன்னர் கண்ட முன்னறிவிப்புக்கு விளக்கம் சொன்னார் நபி யூசுப் (அலை) அவர்கள்.
இவற்றுள் மறுமை வரை படிப்பினை உண்டு:
*لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِأُولِي الْأَلْبَابِ ۗ مَا كَانَ حَدِيثًا* *يُفْتَرَىٰ وَلَٰكِنْ تَصْدِيقَ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ كُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً لِقَوْمٍ يُؤْمِنُونَ*
இவர்களின் வரலாற்று நிகழ்வின் மூலம் அறிவுயுடையோருக்கு படிப்பினை இருக்கிறது என அல்லாஹ் இவ்வசனத்தின் மூலம் சொல்கின்றான்.
இவ்வாறான வசனங்கள் குர்ஆனில் பல இடங்களில் நிறைய இருக்கிறது.
எனவே تأويل الاحاديت،حكمة -- நிகழ்வுகளின் யதார்த்த நிலையை அறிகிற ஆற்றலை அல்லாஹ் எல்லாருக்கும் கொடுக்கமாட்டான்.
நபிமார்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு பொக்கிஷம் தான் இந்த حكمة என்பது
இதை அல்லாஹ் அனைவர்களுக்கும் கொடுப்பதில்லை.மாறாக, நபிமார்களின் நன்நடந்தை குணங்கள் இருக்கும் முஃமின்களுக்கு கிடைக்கும்.
அடிப்படை கலங்கமற்ற ஈமான், இறையச்சம், வணக்கவழிபாடு, பொறுமை, இரக்கம், தர்மளித்தல், பொறுமையற்ற பேசுதல், பிறர் மனதை புண்படுத்தாமல் பேசுதல், சுயசிந்தனை, சுய ஆய்வு, சுயசம்பாதியம், எளிமையான வாழ்க்கை முறை இவ்வாறான நற்குணங்கள் யாரிடம் உண்டோ அவர்களுக்கே இந்த ஆற்றலை அல்லாஹ் கொடுப்பான். இவர்களே சுவனம் போகவும் தகுதி பெறுவர்.
அமல்கள் மூலம் மட்டுமே சுவனம் அடைய முடியாது. (நபிமொழி: முஸ்லிம்: 2816) தூய்மையான இதயத்துடன மறுமையில் அல்லாஹ்முன் நிற்பவர்களுக்கும் இறையச்சத்தோடு அமல்களுக்கே சுவர்க்கம்.
(அல்குர்ஆன்-26:89, 90)
நபி யூஸுப் அவர்கள் வஹீ மூலம் பெற்ற இறைவசன முன்னறிவிப்பு இறைவசனங்கள் பேசுவது ஒன்று.
ஆனால் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் நேரில் நடந்தது நேர்மாற்றமான ஒன்று அவற்றை ஓரளவு விளக்கமாக பார்த்தோம்.
இந்த வரலாற்று நிகழ்வில் நமக்கு படிப்பினை இருக்கிறது.
முன்னறிவிப்புக்கள் அனைத்தும் அந்தந்த முன்னறிவிப்பில் குறிப்பிடப்படுகின்ற வெளிப்படையான சொற்கள் சொல்லுகிற மாதிரியே நடக்காது. அந்த சொல்லாடலின் படிதான் நடக்கும் என நினைப்பது நமது முட்டாள்தனம்.
அவ்வாறு அதில் இடம்பெறுகிற சொல்லை வைத்து அதுவே தான் நடக்கும் என எதிர்பார்ப்பது அறிவு......( علم)
ஆனால் அந்த முன்னறிவிப்பில் வருகிற சொல் குறிக்கிற சாயலில் அதற்கு ஒப்பான/நிகரான ஒன்றை நாம் யூகித்து கொள்வது... அது حكمة،تأويل( الاحاديث)....
இந்த ஹிக்மத்தை அல்லாஹ் மனதால், நற்குணத்தால் சீர்பெற்ற இறையச்சமுள்ள முஃமின்களுக்கே கொடுப்பான்.
தங்க மலை என்று முன்னறிவிப்பில் வந்தால்....அது உண்மையாகவே தங்க மலை என்றுமட்டும் நாம் எவ்வாறு பொருள் கொடுப்பது.....???ஏனெனில் மேலே குறிப்பிட்ட வசனத்தில் செழிப்பான காலத்தை கொழுத்த மாடு போன்று அல்லாஹ் காட்டியுள்ளான் அந்த அரசன் கண்ட முன்னறிவிப்புக்கணவில்....அதே போன்று பஞ்சமான காலத்தை மெழிந்த மாடு மற்றும் காய்ந்த கதிர் போன்று காட்டியுள்ளான் அல்லாஹ்.....
எனவே தங்க மலை என்றால் அது உயர்ந்த செல்வத்தையே... (கச்சா எண்ணெய்/பெற்றோலால் கிடைத்த இந்த சொகுசு வாழ்க்கை) குறிக்கும்.
الله اعلم بالصواب
அது நபியவர்கள் அந்த ஹதீஸில் குறிப்பிட்டது போன்றே யூப்ரடீஸ் நதிக்கறையில் வெளிப்பட்டுவிட்டது 1913 காலப்பகுதியில்(13 கச்சா எண்ணெய்க்கிணறுகள்) பிரிட்டிஷால் கண்டு பிடிக்கப்பட்து.
அதை எடுக்கும் முயற்சியில் தொடங்கி அதன் நிமித்தமாகவே யுப்ரடீஸ் நதி வற்றத்தொடங்கி இன்னும் வற்றிக்கொண்டே இருக்கிறது.
அதைத்தொடர்ந்து நடந்த முதலாம் உலக மகா யுத்தத்தில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் கொள்ளப்பட்டனர் 99/100 நபிகளார் சொன்னது போன்றே உயிர் பலி...
இன்னும் இந்த நாசாமபோன கச்சா எண்ணெய்காகவே அறபு நாடுகளில் உயிர்களும், உடமைகளும் அநியாயமாக ஒவ்வொரு காரணத்தையும் பொய்யாக சொல்லிச்சொல்லி அந்நியர்களால் அழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது இன்றைய நாள்வரை. யுத்தங்களும்
இன்றுவரை கொண்டே இருக்கிறது.
அறபுகளின் பரதேசி வாழ்க்கையையே புரட்டிப்போட்ட மற்றும் ஏகாந்தமாக மாற்றிய கச்சா எண்ணெய், உயர்ந்த கட்டிடங்களையும், கோபுரங்களையும் இன்று காண காரணமாக இருந்த கச்சா எண்ணெய் என்ற தங்க மலை தான் அரபு வஹாபிகளுக்கும் சலபுகளுக்கும் அன்றும், இன்றும் வளமான வாழ்வு கொடுத்துட்டு இருக்கிற தங்க மலைதான்.
ஹஜ் யாத்திரைக்கு போகுபவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவிகளை எதிர்பார்த்த அன்றைய அறபுகள். இன்றைய நாளில் நூறு திர்கம் ஸகாத கொடுத்தாலும் அங்கே வாங்குவதற்கு அறபுகளில் எவரும் இல்லை.
இந்த ஏகபோக வாழ்க்கை அந்த தங்க மலை (கச்சா எண்ணெய்) கொடுத்த பிச்சையே அறபுகளுக்கு.
இவ்வளவும் செய்த கச்சா எண்ணெயை தங்க மலை என்று சொல்லாமல் என்ன என்று சொல்வது....
இதை (கச்சா எண்ணெயை) அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல் அவர்கள் தங்கம் என்று சொல்லவில்லை.
மாறாக1830 காலப்பகுதியில் அமெரிக்கா பென்ஸில்வேனியாவில் தான் றொட்ச்சில்ட் என்பவன்(இலுமினாட்டி/one eye community member) முதன் முதலில் கண்டுபிடித்த நேரம் அவன் இதற்கு வைத்த பெயரும் தங்கம் தான் வரலாறு தெறியாத மூடர்களே....
இது தெறியுமா உங்களுக்கு.
(இதற்கு real face you tube channel ஐப்பார்க்கவும். ஒரு ஆலிம் அல்லாத பாமரர் உங்களுக்கு பாடம் கற்பிக்கிறார் அதனுள் போய் உலக அறிவை தெரிந்து கொள்ளவும். கச்சா எண்ணெயின் முழுமையான விபரத்தை
இப்போது அமெரிககா இதற்கு 1945 ல் இருந்து பயன்படுத்துகிற வார்த்தையும் கருப்பு தங்கம் என்பதுதான். இது தெரியுமா ஒற்றைக்கண் இழந்தவர்களே.
(குர்ஆன் ஹதீஸைத்தாண்டி உலக அறிவு தெறியாதவர்களே.)
ஏன் அல்லாஹ்வின் தூதர் இந்த கச்சா எண்ணெயை (தங்கமலையை) நெருங்க வேண்டாம் என தடுத்தார்கள்??? என நீங்கள் வினவலாம்.....
அதற்கு பல காரணங்கள் உண்டு.....
1. அரபுகளின் ஒற்றுமையையும் பலத்தையும் கூறு போட்ட...கச்சா எண்ணெய உலகப்பற்றில் அரபுகளை மூழ்கடித்த தங்க மலை இது.
இஸ்லாத்தின் எதிரிகளோடு அரபுகளை கூட்டுச்சேர வைத்த தங்கமலை (முதலில் பிரிட்டிஷுடன் பின்பு அமெரிக்கா உடன்.
2. இந்த எண்ணெய்க்காக நிறைய யுத்தங்கள், உயிர் இழப்புகள் நடந்துள்ளது இன்றுவரை.
.3. எண்ணெய் வளம் உள்ளவன் பலமானவன் என்கிற நிலை உலகளவில் தோற்றம் பெறத்தொடங்கியது. இது ஈமான் உள்ள சமூகம் பலமானது என்கிற இறைவசனத்திற்கு மாற்றமானது. இதை வைத்து தான் அரபுகளுக்குள் பொருளாதார ஏற்றத்தாழ்வை தோற்றுவித்தான் வெள்ளைகாரன். (யஃஜுஜ் மஃஜுஜ்).
இதன் விளைவாக தான் ஒருதாய் பிள்ளைபோல் ஒற்றுமையாக இருந்த அரபுகள் தனக்குள் பொருளாதாரத்தில் உயர்ந்தோர் சவுதி, துபாய், கத்தார், ,குவைத்,ஈராக் தாழ்ந்தோர் சிரியா, பாலஸ்தீன், யமன், மிஸ்ர் என்ற எகிப் என்ற பாகுபாடு தோற்றம் பெற்றது.
4. அந்நி வெள்ளையர்களின் நாடுகளான அவர்களின் படையெடுப்புக்கும் அடிமைப்படுத்தலுக்கும் மற்றும் சமயம் சார்ந்த கற்பவைக்கு மாற்றமாக அவர்களது துறைசார்ந்த மற்றும் இப்போது நடைமுறையில் உள்ள இந்த பாடசாலை,பல்கலைக்கழக கற்கையை தோற்றுவித்தது,ஆங்கிலத்தை கற்க தூண்டி சர்வதேச மொழியாக்கினது...இதன் காரணமாக அறபு ஆசியாவிலே காண்மலே போனது...நம்ம மதத்தினது கலாச்சாரத்த சிதைச்சது...நாசமாக்கினது இவ்வாறு நிறைய விடயங்கள் தோற்றம் பெறுவதற்கு அடிப்படை காரணமாக அமைந்ததே இந்த கச்சாதான்...இது இல்லாவிடின் நாம் உபயோகிக்கிற கரண்ட் (மின்சாரத்தில்) இருந்து மேலே ஆகாயத்தில் பறக்கிற flight வரைக்கும் உலகம் கண்டிராது...எவனையும் எவனும் பிடிச்சி ஆழாத சமமான மற்றும் சகோதரத்துவமான பழைய இயல்பு நிலை மரபு வாழ்க்கை முறை இருந்திருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி,.இயந்திரபார்வை இருந்திருக்காது.
கடினமான வேலையற்ற மனித உடம்பு. அதற்குள் பல நோய்கள், அதற்கான மருத்துவ துறை இந்தளவுக்கு நம்மல முட்டாளாக்கி உழைக்கிற... இந்த நிலை எதுவுமே....தோற்றம் பெற்றிருக்காது.....தனக்கு தேவையானதை மனிதன் நம்பிக்கையுடன் அவனது உடல் உழைப்பால் அவன் வாழுகிற சூழலில் பழைய நோய் அற்ற நிம்மதியான எந்த வண்டிப்புகையையும் சுவாசிக்காம....யாருக்கும் யாரும் அடிமை இல்லமா சூப்பரா வாழ்ந்து இருந்திருப்பான்....சீமான்ட பாணிலே சொன்னா....மனிதன் மனிதனா வாழ்ந்திருப்பான்.
இந்த வெள்ள நாதாரிகளுக்கு(يأجوج مأجوج) நாடுகளை எல்லாத்துறைகளிலும் ஆள்வதற்கு வழிசமைத்ததே இந்த தங்கம் மலைதான். (பெட்ரோல்தான்) இதற்காக தான் நபியவர்கள் அதை நெருங்க வேணாம் என்றார்கள்.
*فلما زاغوا ازاغ الله قلوبهم* ....
*فاما الذين في قلوبهم زيغ....*
يوم لا ينفع مال ولا بنون الا من اتي الله *بقلب سليم..* ...
*قلب سليم ليس فيه كبر ولا حسد ولا تعصب ولا نفاق ولا قسوة ....بل ان فيه تقوي وخشوع وعفة ورحمة وتواضع.....واستماع الكلام بلا تكبر......*
நாளை மறுமையில் எவர் சாந்தமான அமைதியான உள்ளத்தோடு இறைவன் முன் நிற்கிறாறோ அவரே வெற்றியாளர். மாறாக அவரது செல்வமோ, பெயரே, புகழோ, ஜமாஅத்தோ உடன் கூக்கிரல் இட்டவர்களோ உதவமாட்டார்கள். எஏனெனில்,
قلب سليم
அந்த உள்ளத்தில் பெறுமை, பொறாமை ,பிடிவாதம்(நான் சொல்வது ,செய்வதுதான் தான் சரி )பிறர் சொல்வதை செவிதாழ்த்தி கேட்க முடியாத அகம்பாவம்,மமதை போன்றவை இருக்காது.
.மாறாக இரக்கம்,சாந்தம் இருக்கும்,பணிவு,பொறுமை இருக்கும்....யாவரையும் மதிக்கிற தன்மை இருக்கும்..பார்ப்பவரை பற்றியெல்லாம் விமர்சனம் ,குறை கூறமாட்டார்.
எனவே நாம் சுவனம் செல்ல இந்த தன்மைகள் கொண்ட உள்ளம் தேவை. இது நம்மில் எத்தனை பேருக்கு உண்டு. சற்று சிந்திப்போம்.
சற்று சிந்திப்போம். நம் உள்ளத்தை
சீர்ப்படுத்துவோம்.
எவர் ஒருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் கண்ணியம் அடைவார்.
(இறைநூல்-26:89)
பயபக்தி உடையவர்கள் அருகில் சுவர்க்கம் கொண்டு வரப்படும்.
(இறைநூல்-26:90)
படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை.








