காகிதத்தில் சுகம் கண்டு ஏமாறுதல்
இந்த அவல நிலைக்குக் காரணத்தையும் இதற்கான தீர்வையும் அறிய முழுமையாகப் படியுங்கள்: h எந்த ஒரு வெற்றுக் காகிதத்திற்கு மக்கள் இன்று அடிமையாக்கப்பட்டு ஆட்டுவிக்கப் படுகிறார்களோ அதைப்பற்றி அவர்கள் அறிந்து கொள்ளாதவரை விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லை . பாமரர்களை விட்டுவிடுங்கள், இன்று நாட்டுமக்களில் படித்தவர்களிடம் இந்தக் கேள்விகளை கேட்டுப்பாருங்கள்... விடை கூறுபவர்கள் மிகவும் அரிதாகவே கிடைப்பார்கள்.. அ) இந்தக் காகிதப்பணம் என்பது ஒரு குறிப்பிட்ட மதிப்பு கொண்ட வாக்குறுதிப் பத்திரம். இதன் மதிப்புக்கான தங்கம் அல்லது வெள்ளி எங்கே பாதுகாக்கப் படுகிறது? ஆ) மக்களின் உழைப்பும் உற்பத்தியும் சேமிப்பும் செல்வமும் இந்த காகிதங்களின் மதிப்புக்கு விலைபேசப்படுகிறது எனும்போது அவ்வளவு மதிப்பு கொண்ட பொருள் இக்காகிதத்தை விநியோகித்த வங்கியிடம் இருக்கவேண்டும் அல்லவா? இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம்? உண்மையில் இந்தக் கேள்விகளை எழுப்புவதற்கோ அல்லது விடைகளை அறிவதற்கோ யாரும் முயற்சிக்கவில்லை என்பதே உண்மை. இந்த விடயத்தில் மக்களின் அலட்சியமும் அறியாமையும் தொடரும்வரை அடிமைத்தளையும் தொடரவே செய்யும்! காகிதத்...